மீசாலையில் யாழ்தேவியுடன் மோதுண்ட உழவு இயந்திரம் கடைக்குள் தூக்கி வீசப்பட்டது-படங்கள் விபரங்கள் இணைப்பு!

மீசாலையில் யாழ்தேவியுடன் மோதுண்ட உழவு இயந்திரம் கடைக்குள் தூக்கி வீசப்பட்டது-படங்கள் விபரங்கள் இணைப்பு!

1970359_771321672944422_5368999422641870806_n

யாழ். மீசாலை சந்தியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையூடாக  கடக்க முற்பட்ட உழவு இயந்திரம் ஒன்று இன்று காலை ரயிலில் மோதியுள்ளது.   யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட கடுகதி புகையிரதம் மோதியதாலேயே  இந்த விபத்து ஏற்பட்டது.   அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிக்கொண்டு சென்ற உழவு இயந்திரம், புகையிரதம்  வருவதற்கான சமிக்ஞை ஒலியையும் மீறி கடவையை கடக்க முற்பட்ட போதே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது   உழவு இயந்திரத்தின் பெட்டி தூக்கி எறியப்பட்டதால் மேற்படி கடை மீது விழுந்து கடைக்குச்  சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து  சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.     

 

Leave a Reply