பிரான்ஸ் புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகாவித்தியாலய பழைய மாணவ சங்க கிளையினால், அன்பளிப்பு செய்யப்பட்ட பாடசாலை உபகரணப்பைகள் மணவர்களுக்கு வழங்கும் நிகழ்வு 26.01.2015 அன்று பாடசாலை மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இப் பாடசாலை மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்த பிரான்ஸ் வாழ் புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகாவித்தியாலய பழைய மாணவர்களின் கரங்களை நட்புடன் பற்றிக்கொள்வதோடு,
இந்நிகழ்வினை சிறப்புற ஒழுங்குபடுத்தி பகிர்தளித்த பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும், பழைய மாணவர் கிளைகளின் ஒருங்கிணைப்பு நிர்வாகத்திற்கும் எமது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி.
பிரான்ஸ் பு. க.ம.வி.பழைய மாணவ சங்க கிளை.