தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகப் பெருமானுக்கு,பஞ்சதள இராஜகோபுரம் அமைக்கும் திருப்பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றது.மிக விரைவில் குடமுழுக்குக் காண இருப்பதாகவும்- தற்போது சித்திவிநாயகப் பெருமானின் பஞ்சதள இராஐ கோபுரத்திருப்பணியின் மூன்றாம் தள கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே புலம் பெயர்ந்து உலகப் பந்தில் பரந்து வாழும் எம் பெருமான் அடியார்கள் அனைவரும் இப்பெரும் கைங்கரியத்தில் இணைந்து மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் திருவருளுக்கு பாத்திரமாகும் வண்ணம் வேண்டுகின்றோம்.