வேலணை பிரதேசசபையினால் வாசிப்பு மாத இறுதி நிகழ்வு 29-01-2015 வியாழக்கிழமை அன்று காலை-வேலணை பிரதேசசபையின் மண்டைதீவு உப அலுவலகத்தில் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வு வேலணை பிரதேச சபை தவிசாளர் திரு.சின்னையா சிவராசா. அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வேலணை பிரதேச செயலர் திருமதி.மஞ்சுளாதேவி சதீசன் அவர்கள் கலந்து கொண்டார்-என்றும் மற்றும் மண்டைதீவு காவற்றுறைப் பொறுப்பாளர்-மண்டைதீவு பங்குத்தந்தை எம்.பத்திநாதர் மற்றும் மண்டைதீவு கிராமசேவையாளர்-பிரதேசசபை உறுப்பினர்கள்-பொதுமக்கள் என அதிகமானோர் கலந்து சிறப்பித்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்-அல்லையூர் மற்றும் நயினை எம்.குமரன்