அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் கதிரவேலு தனபாலசிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வுகள்-16-01-2015 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது-அன்னாரின் உறவினர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட சில நிமிட வீடியோப் பதிவுகளை கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். அல்லைப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு தனபாலசிங்கம் அவர்கள் 14-01-2015 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற ஞானாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும், கெளரி(கனடா), கருணாகரன்(இலங்கை), கரிகரன்(ஜெர்மனி), கமலகரன்(ஜெர்மனி), சதீஸ்கரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும், நவரட்ணம்(சுவிஸ்), கோபாலு(கனடா), வசந்தகோகிலம்(கனடா), அன்னலட்சுமி(இலங்கை), மலர்மகள்(கனடா), தேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜெயந்தன்(கனடா), ஹாரின்(ஜெர்மன்), நாற்றவி(ஜெர்மன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், மயில்வாகனம்(இலங்கை), காலஞ்சென்ற அன்னலட்சுமி, தியாகராஜா(இலங்கை), காலஞ்சென்ற சந்திரலீலா, மனோன்மணி(சுவிஸ்), விஜயாம்பாள்(கனடா), சண்முகலிங்கம்(கனடா), கிருஷ்ணகுமார்(இலங்கை), காலஞ்சென்ற காசிலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற பாக்கியலட்சுமி, சண்முகநாதன், காலஞ்சென்ற ராஜேஸ்வரி, குருசாமி ஆகியோரின் அன்புச் சகலனும், பிருந்தாபன், ஜனுசன், சிந்துஜன், ஜனுஜன், சாருஜன், சந்துஜன், சந்தீவன், ஞானசொருபி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-01-2015 வெள்ளிக்கிழமை அன்று 104, சட்டநாதர் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
பிள்ளைகள், சகோதரர்கள், மருமக்கள், மைத்துனர்கள். |
தொடர்புகளுக்கு | ||||||||||
|