தீவகத்தில் முழுமையாக கடலால் சூழப்பட்ட விவசாயம் செய்வதற்குரிய வளங்கள் மிகவும் குறைந்த எழுவைதீவில் -திரு.க.தர்மரத்தினம் (பழனி) என்னும் பெயருடைய விவசாயி தன்னுடைய வீட்டு வளவிலேயே கடின முயற்சியினால் விவசாயம் செய்து அதிக பலன் பெற்று வருகின்றார்-என்பதுடன் மற்றவர்களுக்கும் ஓர் உதாரணமாகவும் விளங்கி வருகின்றார்.என்று தெரிவிக்கப்படுகின்றது. இவரை சாமஸ்ரீ தேசமானிய திரு.க.இரவீந்திரன் (சமாதான நீதவான்) அவர்களோடு இணைந்து எழுவைதீவு முருகவேள் மகாவித்தியாலய ஆசிரியரும்-எமது நண்பருமாகிய,அகிலன் நற்குணம் அவர்கள் சென்று கலந்துரையாடி பதிவு செய்த நிழற்படங்களை-கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.
இவரது தோட்டத்தில் அனைத்து விதமான மரக்கறி வகைகளும் விளைந்து இருப்பதனை படங்களில் காணலாம்.