தீவகம் வேலணையில் நகர எழுச்சி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் நிா்மாணிக்கப்பட்டுவரும் பொதுச்சந்தை, மற்றும் வடக்கின் வந்தம் விசேட செயற்திட்டத்தின் கீழ் நிா்மானிக்கப்பட்டுவரும் உடற்பயிற்சி நிலையம் என்பன மிக விரைவில் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்படவுள்ளதாக – வேலணை பிரதேச சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேசசபை தவிசாளரின் கடும் முயற்சியினாலேயே இத்திட்டம் கொண்டு வரப்பட்டதாகவும்-20 மில்லியன் ரூபாக்களுக்கு மேல் இத்திட்டத்திற்கு செலவிடப்படவுள்ளதாகவும்-மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டம் முழுமை பெறும் பட்சத்தில் இப்பகுதியினைச் சேர்ந்த,மக்கள் பெரிதும் பயன்பெறுவர் என்று நம்பப்படுகின்றது.
நன்றி-வேலணை பிரதேசசபை