அல்லைப்பிட்டி சென்பிலிப்பு நேரியார் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள அருட்பணி ஜிம்பிறவுண் கலையரங்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒளிவிழா கலை நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அல்லைப்பிட்டி பங்குத்தந்தை,எம்.பத்திநாதர் அவர்களின் தலைமையில் ஒளிவிழா சிறப்பாக நடைபெற்றதுடன்-கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருட்பணி ஜிம்பிறவுண் அவர்கள்-2006 ஆம் ஆண்டு அல்லைப்பிட்டியிலிருந்து மண்டைதீவு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது காணாமல் போயிருந்தார்-என்றும் அவரின் ஞாபகார்த்தமாகவே அல்லைப்பிட்டி புனித பிலிப்பு நேரியார் வளாகத்தில் ஜிம் பிறவுண் கலையரங்கம் அமைக்கப்பட்டுள்ளதாக மேலும் அறியமுடிகின்றது.