உலகில் எங்கு வாழ்ந்தாலும் இலங்கையினர் நாடு திரும்ப வேண்டும் – மங்கள சமரவீர!

உலகில் எங்கு வாழ்ந்தாலும் இலங்கையினர் நாடு திரும்ப வேண்டும் – மங்கள சமரவீர!

இலங்கையினர் உலகின் எந்தப் பகுதியில் அகதிகளாக இருந்தாலும் அவர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா கூறியுள்ளார்.
Sans-titre-14
 
இந்தியா வந்திருந்த இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா பத்திரையாளர் சந்திப்பின்போது இதனைத் தெரிவித்தார்.
 
இது குறித்து அவர் கூறுகையில், “இலங்கையில் சகல இன மக்களின் வாக்குகளினால் உண்மையான அரசு, தற்போது ஆட்சிக்கு வந்துள்ளது. இந்நிலையில் உலகின் எந்த ஒரு பகுதியிலும் இலங்கை மக்கள் அகதிகளாக இருக்கக் கூடாது.
 
நமது தாய் நாட்டிற்கு தயவுசெய்து திரும்புங்கள். உங்கள் அனைவரையும் திறந்த மனதுடன் வரவேற்க நேசக்கரம் நீட்டுகிறோம் “ என்றார்.

Leave a Reply