கமலுக்கு அடுத்து சிவகார்த்திகேயன் மூன்றாவது இடம்தான் தனுஷுக்கு…

கமலுக்கு அடுத்து சிவகார்த்திகேயன் மூன்றாவது இடம்தான் தனுஷுக்கு…

படங்களின் ட்ரெய்லர், டீஸர் எவ்வுளவு பேரால் பார்க்கப்படுகிறது என்பதை வைத்தே இப்போது நடிகர்களின் ஸ்டார் பவர் கணக்கிடப்படுகிறது. அந்தவகையில் எல்லா ஸ்டார்களையும் ஷங்கர் தனது ஐ மூலம் பின்னுக்கு தள்ளினார்.
 
1421992596-8687
பொங்கலுக்கு கமலின் உத்தம வில்லன், சிவ கார்த்திகேயனின் காக்கி சட்டை, கார்த்தியின் கொம்பன் ஆகிய படங்களின் ட்ரெய்லர்கள் வெளியிடப்பட்டன.
 
இதில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது உத்தம வில்லன். இரண்டாவது இடத்தில் சிவ கார்த்திகேயனின் காக்கி சட்டை. காக்கி சட்டையை பார்த்தவர்களில் நாலில் ஒரு பங்குக்கும் குறைவானவர்களே கொம்பன் ட்ரெய்லரை பார்த்துள்ளனர். 
 
பொங்கலுக்கு முன்பே வெளியான தனுஷின் அனேகன் ட்ரெய்லரைவிட ஒரு லட்சம் அதிகம் ஹிட்ஸ் சிவ கார்த்திகேயனின் காக்கி சட்டைக்கு கிடைத்துள்ளது.
 
நான் வளர்கிறேனே மம்மி டயலாக் இப்போதைக்கு சிவ கார்த்திகேயனுக்குதான் பொருந்தும்.

Leave a Reply