இலங்கை  அரசின் தேச நலனுக்கான புதிய பயணம்-சிறப்புக்கட்டுரை……..

இலங்கை அரசின் தேச நலனுக்கான புதிய பயணம்-சிறப்புக்கட்டுரை……..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் தனது நூறு நாள் வேலைத்திட்டத்தை நிறைவேற்றி முடிப்ப தற்கான செயற்பாடுகளை துரித கதியில் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது. அரசாங்க வளங்களை வீண்விரயம் செய்வ தையும், ஊழல் முறைகேடுகளையும் தடுத்து நிறுத்துவதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை பெருமளவில் குறைக்க முடியுமென்பது புதிய அரசாங்கத்தின் நம்பிக்கையாகும். கட்டுமீறிப் போயிருக்கும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை சாத்தியமான அளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மக்களின் துன்பச்சுமைகளை நீக்க முடியுமென்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

maiththiripala

புதிய அரசாங்கம் எதிர்வரும் 29ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருக்கும் இடைக்கால வரவு செலவுத் திட்டமானது மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான அதிகளவு நிவாரணங்களைக் கொண்டிருக்குமென அரசாங்க தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தியாவசியமான பத்துப் பொரு ட்களின் விலைகள் குறைக்கப்படுமென்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், மேலும் பல பொருட்களின் விலைகள் தானாகவே குறைவடைவதற்கு ஏதுவான வகையில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணங்கள் உள்ளட க்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.

கடந்த ஆட்சிக்காலத்தில் பொருட்களுக்குரிய விலைகளும் அத்தி யாவசிய சேவைகளுக்குரிய கட்டணங்களும் எழுந்தமான முறை யில் பன்மடங்கு அதிகரித்துச் சென்றமைக்கான காரணங்களை மக்கள் நன்கறிவர். வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கான உண்மையான காரணங்களை மூடி மறைத்து வைத்து, போலியான காரணங்களையே கடந்த கால ஆட்சியாளர்கள் மக்களுக்குக்கூறி வந்தனர். எனினும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு உண்மை யான காரணம் கடந்த கால ஆட்சித் தலைமையின் தான் தோன்றித்தனமான செயல்பாடுகள்தான் என்பதை பாமர மக்களும் நன்கு தெரிந்து வைத்துள்ளனர்.

கடந்த கால ஆட்சித் தலைமையின் ஊதாரித்தனமான ஆடம்பர சுக போகங்களுக்காக அரசாங்க உண்டியல் காலி செய்யப்பட்டமைக் கான சுமையை மக்களே சுமக்க வேண்டியிருந்தது. ஓரிரு குடும் பங்களின் சுகபோக இடாம்பீக வாழ்வுக்காக அப்பாவி மக்களின் உழைப்பு பெருமளவில் சுரண்டப்பட்டுள்ளதென்பது வெளிப்படை யான உண்மையாகும். இதற்கான ஆதாரங்கள் சமீப தினங்களாக ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. ஆட்சியாளர்களுக்கான தனிப்பட்ட ஆடம்பர வாழ்வுக்காகவும் அரசாங்கம் மீது மக்கள் மத்தியில் போலியான மாயவிம்பத்தைக் காண்பிப்பதற்காகவும் மக்களின் பணம் இத்தனை காலமும் வாரியிறைக்கப்பட்டுள்ளதென்பதை ஊடகங்கள் பட்டியலிட்டுக் காண்பித்துக் கொண்டிருக்கின்றன. ‘தேசத்துக்கு மகுடம்’ கண்காட்சி இவ்வாறான வீணான ஆடம்பரத்துக்கு ஒரு உதாரணமாகும்.

இவ்வாறான விரயங்கள், முறைகேடுகள், ஊழல், துஷ்பிரயோகம் போன்றவை இப்போது முற்றாக நிறுத்தப்பட்டிருப்பதனால் பொருட்களின் விலைகள் எதிர்காலத்தில் கணிசமான அளவு குறைந்து விடுமென்று மக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கமானது இரு பிரதான கட்சிகளை மாத்திரம் கொண்ட ஒரு தோழமைக் கூட்டணியல்ல….. ஏனைய பல கட்சிகளுடன் சேர்ந்து ஒரே நோக்க த்துக்கான பயணத்தை முன்னெடுத்துள்ள கூட்டணியாகவே புதிய அரசாங்கம் விளங்குகிறது. இது தனித்தனியான பயணம் அல்ல வென்றும் தேசத்தின் நலனுக்கான ஒருமித்த பயணமெனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் பாராளுமன்ற த்தில் ஆற்றிய விசேட உரையில் குறிப்பிட்டிருந்ததை நாம் இங்கு கோடிட்டுக் காட்டுவது மிகவும் பொருத்தமாகும்.

அரசியல் அநாகரிகமும் சர்வாதிகாரமும் மிகுந்த காலகட்டமொன்றில் இருந்து மீட்சி பெற்றுள்ள எமது நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான மாபெரும் பணியை புதிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.அதேசமயம் நாட்டில் நீண்ட காலமாக தீர்க்கப்படாதிருக்கும் தேசியப் பிரச்சினைக்கு அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க விதத்திலான அரசியல் தீர்வொன்றைக் காண வேண்டிய பாரிய பொறுப்பையும் புதிய அரசாங்கம் எதிர்நோக்கியிருக்கிறது. இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வானது ஒற்றையாட்சிக்கு உட்பட்டதாகவே அமையுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் உறுதியாகத் தெரிவித்து ள்ளார். அரசியலமைப்பின் 13வது திருத்தம் ஒற்றையாட்சிக்கு உட் பட்டதாகவே காணப்படுவதையும் பிரதமர் அங்கு சுட்டிக்காட்டி யுள்ளார்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும், தேசியப் பிரச்சி னைக்கு சாதகமானதொரு தீர்வினைக் கண்டு இனங்களுக் கிடையே ஐக்கியத்தையும் நல்லுறவையும் தோற்றுவிப்பதற்கு கடந்த ஆட்சித்தலைமை எந்தவொரு நகர்வையுமே முன்னெடுக்க வில்லை. இதற்கு மாறாக இனங்களுக்கிடையே விரிசல்களை ஏற் படுத்தும் விதமாகவே கடந்த அரசின் செயற்பாடுகள் அமைந்தி ருந்தன.இனங்களுக்கிடையே பேதங்களை வளர்ப்பதன் மூலம் பெரும்பான் மையின மக்களின் ஆதரவை வசீகரிப்பதே கடந்த அரசின் வியூகமாக அமைந்திருந்தது. அதேவிதமான இனவாதத் துரும்பை தங்களது அரசியல் பயணத்தில் தொடர்ந்தும் பயன்படுத்துவதிலேயே எதிர்க்கட்சி இப்போது குறியாக நிற்கிறது.

அரசியல் தீர்வு என்ற விடயத்துக்கு ‘பிரிவினை’ என்ற சாயம் பூசும் கைங்கரியத்திலேயே தென்னி லங்கையில் உள்ள அரசுக்கு எதிரான சக்திகள் இப்போது ஈடு படுகின்றன. பெரும்பான்மையின மக்கள் இனவாத அரசியலுக்கு ஜனாதிபதித் தேர்தலில் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர். நாட்டின் பொரு ளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில் உள்ளதென்பதையும், தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் கடந்த அரசாங்கம் விளைவித்த பாதிப்புகள் மோசமானவையென்பதையும் பெரும் பான்மையின மக்கள் புரிந்து கொள்வது இவ்வேளையில் அவசி யம். இனவாதம் களைந்த ஐக்கியம் நிறைந்த பயணத்தில் அனை த்து இன மக்களும் கைகோர்க்க வேண்டிய தருணம் இது வென்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.

நன்றி-தினகரன்

Leave a Reply