இலங்கையில் புதன்கிழமை நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை புதிய அரசாங்கத்தினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 150ரூபாவாக இருந்த (92 )ஒரு லீட்டர் பெற்றோல் 33ரூபாய் குறைவடைந்து, 117ரூபாவாகவும்- 158 ரூபாவாக இருந்த (95 ) ஒரு லீற்றர் பெற்றோல் 30 ரூபா குறைவடைந்து, 128 ரூபாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.
இதேவேளை 133 ரூபாவாக இருந்த ஒரு லீட்டர் சுப்பர் டீசல் 23 ரூபா குறைவடைந்து, 110 ரூபாவாகவும்- 111 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் டீசல் 16 ரூபாய் குறைவடைந்து,95 ரூபாவாகவும்- மேலும் 81 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் மண்ணெண்ணை 16 ரூபாய் குறைவடைந்து,64 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.