தீவகம் தெற்கு வேலணை பிரதேச செயலகத்தில் கடந்த 16 .01.2015 வெள்ளிக்கிழமை அன்று தைப்பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில்- வேலணை பிரதேச கலாசார பேரவையால் இவ்விழா சிறப்பாக நடத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விழாவிற்கு வடமாகாண ஆளுநரின் செயலாளர் திரு .இ .இளங்கோவன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் -மேலும் அரச அதிகாரிகள்-கல்விமான்கள்-பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிழற்படங்கள்-நயினை எம்.குமரன்