அல்லையூர் இணையம் மூன்றாவது ஆண்டாக-வன்னியில் அமைந்துள்ள மகாதேவா ஆச்சிரமத்தில் தங்கி கல்விபயிலும் ஆதரவற்ற,300க்கும் அதிகமான மாணவர்களின் நலன் கருதி,உங்கள் பேராதரவுடன் தைப்பொங்கல் விழாவினை ஏற்பாடு செய்து மிகச் சிறப்பாக 15-01-2015 வியாழக்கிழமை அன்று நடத்தியிருந்தது.
இங்கு ஆண்கள் பிரிவு-பெண்கள் பிரிவு என,இரண்டு பிரிவுகளாக பொங்கலிடப்பட்டதுடன்-அல்லையூர் இணையத்தின் சார்பில்-செல்வன் மகேஸ்வரநாதன் கிருசன்-செல்வன் தனபாலசிங்கம் ஜனகன் ஆகியோர் முதல் நாள் இரவு மகாதேவா ஆச்சிரமத்திற்குச் சென்று தங்கி பொங்கல் விழாவில் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இப்பொங்கல் விழாவிற்காக-அல்லையூர் இணையத்தினால் திரட்டப்பட்ட 96 ஆயிரம் ரூபாக்களில் செலவுகள் தவிர்த்து-90 ஆயிரம் ரூபாக்களை,பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் ஊடாக-மகாதேவா ஆச்சிரம நிர்வாகத்திடம் ஒப்படைத்திருந்தோம்-அதற்கான பற்றுச்சீட்டு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அல்லையூர் இணையத்தின் மீது நம்பிக்கை வைத்து-நிதி வழங்கிய,கருணை உள்ளங்களின் பெயர் விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
01-அமரர்கள் திரு,திருமதி இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதியினர் சார்பாக வழங்கப்பட்ட நிதி(மண்டைதீவு-அல்லைப்பிட்டி-பிரான்ஸ்)
02-திரு சுப்பிரமணியம் இராஜலிங்கம் (எஸ்.ஆர்)அல்லைப்பிட்டி -பிரான்ஸ்)
03-திரு குலசிங்கநாதன் முகுந்தன்( மண்டைதீவு -லண்டன்)
04-திரு வியாகரத்தினம் சௌந்தராஜன் -சாந்தன் (அல்லைப்பிட்டி- நோர்வே)
05-திரு முத்துக்குமார் சந்திரகுமார்-சந்திரன் (அல்லைப்பிட்டி- லண்டன்)
06-திரு சந்திரலிங்கம் (அச்சுவேலி- பிரான்ஸ்)
07-திரு சிவலிங்கம் ஜனேந்திரன் (அல்லைப்பிட்டி- பிரான்ஸ்)
இவர்கள் அனைவர்களுக்கும்-மகாதேவா ஆச்சிரமத்து மாணவர்கள் சார்பிலும்-அல்லையூர் இணையம் சார்பிலும்-இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.