அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள நூற்றாண்டு பழைமையான பாடசாலையாகத் திகழும் றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் -முதல் முறையாக தைப்பொங்கல்விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுத்த அனர்த்தங்களுக்குள் சேதமடைந்து அழிவுற்று கவனிப்பாரற்றுக் கிடந்த இப்பாடசாலையினை-தனி ஒரு மனிதனாக நின்று -அனைவரையும் அரவணைத்துக் கொண்டு -பாடசாலையின் வளர்ச்சி ஒன்றினையே நோக்கமாகக் கொண்டு -கடினமாக உழைத்து கல்வியில் முன்னேற்றி வரும்-அதிபர் என்.பத்மநாதன் அவர்களுக்குத் தான் நாம் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும்.
மதங்களைக் கடந்து பாடசாலையின் வளர்ச்சி ஒன்றினை மட்டும் நோக்கமாக கொண்டு செயற்படும் அதிபர் அவர்கள்-தைப்பொங்கல் விழாவினை பாடசாலையில் சிறப்பாக நடத்தியிருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும்.