பசுவைப் பணிந்து வணங்கும் பட்டிப் பொங்கல் நன்னாள்-சிறப்புக்கட்டுரை!

பசுவைப் பணிந்து வணங்கும் பட்டிப் பொங்கல் நன்னாள்-சிறப்புக்கட்டுரை!

10675730_771396489595490_9114895582487454028_n

உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல பரம்பொருளான சிவபெருமானை வணங்கி வாழ்த்தி வழிபட்டு நிற்கின்ற தொன்மை மிக்க சமயம் சைவசமயம். சைவசமய முழுமுதற் கடவுளான சிவபெருமா னுடைய வாகனம் இடபம். எம் பெருமான் ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு பஞ்ச கிருத்தியம் எனப்படும் ஐந்தொழில்களையும் புரிகின்றார்.

இந்த ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற வேலையைத் தமது சக்தியைக் கொண்டே செய்கின்றார் சிவபெருமான். அந்தச் சக்தியாகிய உமையவள் பசுவை வணங்குகின்ற தன்மையையுடையவள். “கோமாதா எங்கள் குலமாதா” என்று கோபூஜை செய்கின்ற சக்தியோ சர்வ வல்லமை படைத்தவள்.

அந்தச் சக்தியின் இன்னருளால் பசுக்கூட்டங்கள் பசுமையாக வளர்க்கப்பட்டு ஆதரிக்கப்படுகின்றன. அத்தகைய பசுக்களும் இடபங்களும் சைவ சமயிகளின் வழிபடுதெய்வமாக விளங்கி வருகின்றன. நமது முன்னோர் தைப்பொங்கல் நாளுக்கு அடுத்த நாள் பட்டிப் பொங்கல் என்று நிர்ணயஞ்செய்து வழிபட்டு வருகின்றனர்.

நெல் வயல்களிலே உழவரோடு சேர்ந்து பாடுபட்டு உழைத்த காளை மாட்டுக்கும், பால் உணவு கொடுக்கும் பசு மாட்டுக்கும் பூசை செய்து வழிபாடியற்றி பொங்கிப் படைத்து வணங்குவது தொன்று தொட்டு நிலவிவரும் பாரம்பரிய வழக்கமாகும். வயலிலே நெல்மணி விளைச்சலுக்கு உதவிபுரிந்த சூரியபகவானுக்கும் மற்றும் நெல் வயலில் வேலை செய்த காளைமாட்டுக்கும் மற்றும் பசுக்களுக்கும் ருசிமிக்க பொங்கல் பொங்கிப்படைத்து வணங்குவதே இன்றைய பட்டிப்பொங்கலின் சிறப்பாகும்.

இன்றைய பட்டிப் பொங்கலை மாட்டுப்பொங்கல் என்றும் அழைப்பர். நெல்வயலில் உழவரோடு சேர்ந்து உழை த்த மாடுகளுக்கு வாய்க்கு ருசியாகப் பொங்கிப்படைத்து வழிபடுதலே இதன் சிறப்பம்சமாகும். ஏனெனில் மனித வர்க்கம் மாடுகளை “வாயில்லா ஜீவன்” என்று சொல்லிக் கொள்வது வழக்கம். அதன்மேல் இரக்கம் கொண்டு தம்மோடு வேலை செய்தது, தம்மோடு ஒன்றாகச் சேர்ந்து பாடுபட்டது என்பதைக் காரணமாக வைத்துப் பொங்கலிட்டுப் பூசை வழிபாடு இயற்றுவதாகச் சொல்லப்படுகிறது.

பசுக்கள்தெய்வீகமானவை. அதனு டைய உடம்பிலே தேவர்கள் வாசஞ் செய்வதாகக் கூறப்படுகிறது. அத்துடன் இறைவனுக்கு அபிஷேகத் திரவியங்க ளைக் கொடுக்கின்ற புண்ணியப் பேற்றையுடையது. பால் ஒரு பூரண உணவு. பசுவை நாங்கள் வணங்கியும் வாழ்த்தியும் வழிபட வேண்டும்.

முற்காலத்தில் போர் செய்யும் மன் னர்கள் முதலில் பசு நிரைகளையே கவர்வார்களாம். ஒரு நாட்டின் செல் வமே பசுக்கள்தான். மனு நீதிகண்ட சோழ மன்னன் ஆராய்ச்சி மணியை அடித்த பசுவின் துயர்போக்கத் தன் மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன் றான் என்பது வரலாறு. தேவாரங்கள் பாடியவர்களாகிய சம்பந்தர், சுந்தர், அப்பர் ஆகிய மூவருமே பசுக்களைப் புகழ்ந்து பாடியுள்ளனர். “ஆவினுக்கருங் கலம் அரனஞ்சாடுதல்” “வாழ்க அந் தணர் வானவர் ஆனினம்” என்றெல்லாம் போற்றியிருக்கிறார்கள்.

பசுக்கள் தெய்வீகம் நிறையப் பெற்ற காரணத்தாலும், மனிதருக்கு வாழ்வில் முக்கிய இடம் வகிக்கின்ற பால் கொடுப்பதோடு சாணத்தை சத்துமிக்க பசளையாகப் பயன்படுத்துகின்ற காரணத்தாலும் தை பிறந்த மறுநாளே பட்டிப்பொங்கல் வைத்து நன்றி செலுத்துகின்ற பாரம்பரிய சம்பிரதாயம் வழக்கிலிருக்கின்றது.

ஒரு வீட்டில் பசுமாடு நின்றால் அந்த வீட்டில் மங்களம் உண்டாகும். தெய் வீக சாந்நித்தியம் வந்து சேரும். சுபி ட்சமும் லட்சுமிகரமும் துலங்கும். நோய் வரவேவராது. “மாடு” என் றாலே செல்வம் என்றுதான் பொருள். ஆகவே, மாடு வளர்க்கின்ற வீடு செல்வச் செழிப்போடு திகழ்வதுடன் எந்நேரமும் பசுவின் சுவாசம் நிகழ்வதால் சுகாதார சுத்தமும் பேணப்படுகின்றது. பசுவின் சலமும், சாணமும் மருத்துவ குணமுடையவை. சுத்தமான விபூதியும் இதிலிருந்தே தயாரிக்கப்படுகின்றது.

இத்தனை பேரும் புகழும் மிக்க தெய்வீகப் பசுக்களுக்கு இன்று நல்ல இனிப்பான பொங்கல் பொங்கிப்ப டைத்து பூசை வழிபாடுகள், ஆரா தனைகள் செய்து வணங்கி மகிழ் வார்கள்.

இது ஒரு புறமிருக்க, ஸ்ரீ ஆண் டாள் தமது திருப்பாவையிலே “மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்” என்று பாடியிருக் கின்றார். இதிலிருந்து என்ன அறிகின்றோம்? பசுக்கள் இல்லாவிடின் நாட்டில் செல்வமும் இல்லை, சீரான நல்ல வாழ்வும் இல்லை என்பதுதான் உண்மை.

Leave a Reply