இலங்கை வந்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் மன்னார் மடு மாதா திருத்தலத்திற்கு விஜயம் செய்தார். அங்கு திருத்தந்தையை லட்சக்கணக்கான மக்கள் கூடி நின்று வரவேற்றனர். உலங்குவானூர்தி மூலம் மடுவைச் சென்றடைந்த பாப்பரசர் அங்கிருந்து மடுமாதா திருத்தலத்திற்கு வாகன பவனியாக அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து பாப்பரசர் தலைமையில் மடுமாதா திருத்தலத்தில் விசேட திருப்பலி பூசை ஒப்புக் கொடுக்கப்பட்டது.
மடுமாதா ஆலயத்தில் பாப்பரசர் கலந்து கொண்ட விஷேட திருப்பலியின் முழுமையான காணொளியினை உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.