யாழ் தீவகம் வேலணை மத்திய கல்லூரில் அமைக்கப்பட்டிருந்த,சரஸ்வதி சிலை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இனந்தெரியாத நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவகத்தில் தலைசிறந்த கல்விமான்களை உருவாக்கிய,உருவாக்கி வரும் வேலணை மத்திய கல்லூரி-கடந்த யுத்த காலத்தில் பல சிரமங்களைச் சந்தித்திருந்த போதிலும்-மீண்டும் வழமைக்குத் திரும்பி சிறந்த கல்வியினை தீவக மாணவர்களுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இப்படி பல சிறப்பு க்களை பெற்ற-வேலணை மத்திய கல்லூரியில் நிறுவப்பட்டிருந்த சரஸ்வதியின் சிலையே-விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளதாகவும்-உடைத்தவர்களை கண்டுபிடிக்க,ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.