உலக சாதனைக்காக 400 அடி நீளம் கொண்ட உலகின் நீண்ட திருக்குறள் பதிப்பு சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு திருவள்ளுவர் நாளை முன்னிட்டு வரலாற்றில் முதல் முறையாக உலகின் மிக நீண்ட திருக்குறள் பதிப்பு சென்னை மெரீனா கடற்கரை திருவள்ளுவர் சிலை அருகே வெளியிடப்பட்டது. 133 அதிகாரங்கள் அடங்கிய 1330 திருக்குறளும் 400 அடி நீளமுள்ள பதாகையில் அச்சிட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
