யாழ் தீவகத்தில் கடந்த பல வருடங்களாக-விவசாயிகளினால் நெல் பயிரிடுவது சில காரணங்களினால் குறைவடைந்து வரும் நிலையில்-இதற்கு விதிவிலக்காக -அனலைதீவில் மட்டும் வயல் நிலங்கள் முழுவதும் நெல் பயிரிடப்பட்டு அமோக விளைச்சலை பெற்று விவசாயிகள் பயன் அடைந்து வருவது ஆச்சரியம் தருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வருடம் ஏற்பட்ட கடும் வறட்சி-மழை வெள்ளம் ஆகியவற்றிலிருந்து நெற்பயிர்கள் தப்பி வளர்ந்து கதிர் தள்ளி நிற்பதனை நிழற்படங்களில் பார்வையிட முடிகின்றது.
கடந்த வருடமும் தீவகம் அனலைதீவில் மட்டுமே நெல் முழுமையாகப் பயிரிடப்பட்டு-அறுவடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.