1974ம் ஆண்டு தைமாதம் 10ம் திகதி 4வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட 41வது சிரார்த்ததினம் 10-01-2015 சனிக்கிழமை அன்று- யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் சனிக்கிழமை காலை மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு மௌன அஞ்சலியும் இடம்பெற்றது.
அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவாஜிலிங்கம், உட்பட பலரும் கலந்துகொண்டனர்.