வன்னியில் அமைந்துள்ள குருகுலமான மகாதேவா ஆச்சிரமத்தில் தங்கியிருந்து கல்விகற்று வரும்-பெற்றோர்களை இழந்த,ஆதரவற்ற மாணவர்களுக்காக,அல்லையூர் இணையம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பொங்கல் விழாவினை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றது.
கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்ற,தைப்பொங்கல் விழாவிற்காக-அல்லையூர் இணையம் திரட்டிய நிதியினை-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களினால் நேரடியாக –
மகாதேவா ஆச்சிரம நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன்-அல்லையூர் இணையத்தின் சார்பில் பல இளைஞர்களும் மற்றும் மண்டைதீவைச் சேர்ந்த,சமூக ஆர்வலர் திரு.வசந்தரூபன் அவர்களும் நேரடியாகச் சென்று பொங்கல் விழாவினைச் சிறப்பாக நடத்தி மாணவர்களின் சந்தோசத்தில் பங்கெடுத்துக் கொண்டனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு தைப்பொங்கல் விழாவிற்காக-ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாக்களும்
கடந்த 2014 ஆம் ஆண்டு தைப்பொங்கல் விழாவிற்காக-90 ஆயிரம் ரூபாக்களையும்,உங்களிடமிருந்து திரட்டி மகாதேவா ஆச்சிரம நிர்வாகத்திடம் அல்லையூர் இணையம் வழங்கியிருந்தது-இதற்கான பற்றுச்சீட்டுக்களும் அன்றுஎமது இணையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தன.
பொங்கல் விழா-2015
அன்பான கருணை மிக்க உள்ளங்களே!
வன்னியில் அமைந்துள்ள மகாதேவா ஆச்சிரம மாணவர்களுக்காக-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் 15-01-2015 வியாழக்கிழமை அன்று நடைபெறவுள்ள தைப்பொங்கல் விழாவிற்கான நிதி உதவியினை-கருணைமிக்க உள்ளங்களிடமிருந்து நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றோம்.
அனைத்து தொடர்புகளுக்கும்*****0033651071652