அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் குணரத்தினம் அவர்களின் பூட்டியான ஹர்ஷயா நீறஜன் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் குணரத்தினம் அவர்களின் பூட்டியான ஹர்ஷயா நீறஜன் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

111590

அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர்களான,அமரர்கள் திரு திருமதி குணரத்தினம்-பூங்காவனம் தம்பதியினரின் அன்புப் பூட்டியான  ஹர்ஷயா நீறஜன் என்ற இரண்டு வயது பெண்குழந்தை,கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த போது 31-12-2014 அன்று காலமானார்.இவர் மண்கும்பான்  பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் நீண்டகாலம் சிற்றுண்டிச்சாலை நடத்தியவரான,அமரர் குணரத்தினம் (குணம்) அவர்களின் அன்புப் பூட்டியும்,மண்கும்பானைச் சேர்ந்த,குகநேசன்-சாந்தி தம்பதியினரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இறுதி நிகழ்வுகள் 04-01-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ் கண்ணாதிட்டியில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று-பின்னர் மண்கும்பான் சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

கனடா Toronto ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஹர்ஷயா நீறஜன் அவர்கள் 31-12-2014 புதன்கிழமை அன்று இலங்கையில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், விஜயகாந்தன், காலஞ்சென்ற அஞ்சலிதேவி, நாகேஸ்வரி தம்பதிகள் மற்றும் குகநேசன் சாந்தினி(சங்கீதா நகை மாடம்) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

நீறஜன் சங்கீதா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,

சபரிஷ் அவர்களின் அன்புச் சகோதரியும்,

நீறஜா, நிருஷா ஜெயசீலன், வசந்த், நிஷாந் ஆகியோரின் அன்பு மருமகளும்,

நிருஷன், சயந்தி, டக்சிகா ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

கேசியா அவர்களின் பாசமிகு மைத்துனியும்,

மங்களேஸ்வரி அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

 

தொடர்புகளுக்கு
— — இலங்கை
தொலைபேசி: +94212229330
செல்லிடப்பேசி: +94770178434
— — கனடா
செல்லிடப்பேசி: +16473135151

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux