அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தினைப்,பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா அவர்களின் இரண்டாது ஆண்டு நினைவு தினம் 01-01-2015 வியாழக்கிழமை அன்று நினைவுகூரப்படுகின்றது.அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு-
யாழ் சுன்னாகத்தில் அமைந்துள்ள வாழ்வகம் விழிப்புலன் இழந்த மாணவர்களின் இல்லத்தில் பிரார்த்தனை நிகழ்வுடன்- சிறப்பு உணவும் வழங்கப்பட்டது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-அவரது உறவினர்களுடன் இணைந்து -அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்-அல்லையூர் இணையம் சார்பிலும்-ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.
அன்னாரின் உறவினர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட-நிழற்படங்களைில் சிலவற்றை,உங்கள் பார்வைக்கு கீழே பதிவு செய்துள்ளோம்.
இதைப்போன்று நீங்களும் செய்ய முன் வரவேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே- படங்களை உங்கள் பார்வைக்கு தொடர்ந்து பதிவு செய்கின்றோம்.