அல்லைப்பிட்டியில் மிகப்பழமையான ஆலயமாக விளங்கும்-சிந்தாமணி பிள்ளையார் (சருகுப்பிள்ளையார்) ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு அதிகமான மக்கள் கலந்து கொண்டு பொங்கல் பொங்கி வழிபாடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாலயத்தினை புனரமைத்து ஒருநேர பூஜையாவது நடத்த வேண்டும் என்ற நோக்கோடு-தற்போது நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்-
ஆலயத்திற்கான புதிய நிர்வாகவும் ஒன்று அண்மையில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும்-இப்புதிய நிர்வாகத்தின் ஊடாகவே -கடந்த 25-12-2014 வியாழக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு பொங்கல் நடத்தப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.