புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த, அல்லைப்பிட்டி றோ.க.த.க. வித்தியாலய மாணவிக்கு 50ஆயிரம் பரிசு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த, அல்லைப்பிட்டி றோ.க.த.க. வித்தியாலய மாணவிக்கு 50ஆயிரம் பரிசு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

DSC_1092

அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலயத்தின் மாணவி -செல்வி பார்த்தீபன் சாணுஜா அவர்கள் அண்மையில் வெளியாகிய  புலமைப்பரிசில் பரீட்சையில் 151 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார்.செல்வி பார்த்தீபன் சாணுஜாவிற்கு  பாடசாலை சமூகத்தினால் 04-12-2014 வியாழக்கிழமை அன்று  பாராட்டு விழா நடத்தப்பட்டு 50 ஆயிரம் ரூபாக்களுக்கு மேற்பட்ட  பரிசுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு,  தனி ஆளாக நின்று அல்லைப்பிட்டியில் இயங்கும் பொது அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் என அனைவரையும் அரவணைத்துக் கொண்டு-பாடசாலையினை  வளர்ச்சிப் பாதையில்  மட்டுமே கொண்டு செல்லும்  -அதிபர் என்.பத்மநாதன் அவர்களையே முதலில் நன்றியோடுபாராட்ட வேண்டும்.அவருக்கு புலம் பெயர் அல்லைப்பிட்டி மக்களின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பரீட்சையில் சித்தியடைந்த,செல்வி பார்த்தீபன் சாணுஜாவிற்கு -அதிபர் என்.பத்மநாதன் அவர்களினால் 37 ஆயிரம் ரூபாக்கள் மாணவியின் பெயரில் வங்கியில் வைப்பிலிடப்பட்டு வங்கிக்கணக்குப் புத்தகம் வழங்கப்பட்டதுடன்-புதிய துவிச்சக்கர வண்டியுடன் – அதிபரினால் மாணவிக்கு தங்கப்பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அல்லையூர் இணையத்தின் ஊடாக-அமரர் அந்தோனி அன்ரனிராஜா( தேவா)அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவுதினத்தினை (04-11-2014)முன்னிட்டு-அவரது துணைவியார் திருமதி பற்றிமா அந்தோனிராஜா அவர்கள் 20.000 ஆயிரம் ரூபாக்களை வழங்கியிருந்தார்.அவருக்கும் எமது நன்றிதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.

1947380_867180636654796_489160392501201653_n
10842111_867179743321552_1369105176961187039_o 1537945_867180663321460_1972051501933236031_o allaiyoor copy (6)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux