தீவகத்தில் நாய்களின் இனப்பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கோடு-வேலணை பிரதேசசபையினால் அதன் ஆளுகைக்குட்பட்ட கிராமங்களான,மண்டைதீவு-அல்லைப்பிட்டி-மண்கும்பான்-வேலணை-புங்குடுதீவு-நயினாதீவு ஆகிய கிராமங்களில் வளர்ப்பு நாய்கள் மற்றும் கட்டாக்காலி நாய்கள் அனைத்துக்கும் கருத்தடை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேலணை பிரதேசசபையின் ஊடாக வேலணை மிருக வைத்தியர்களினால் இந்நாய்களுக்கான கருத்தடை மேற் கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்லைப்பிட்டியில் கடந்த 02-12-2014 செவ்வாய்க்கிழமை அன்று பகல் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
எனவே இனி வரும் காலங்களில் நாய்களின் தொல்லை குறைவடையலாம் ஆனால்……