அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,திருமதி சண்முகதாசன் மங்கையர்க்கரசி (லீலா)அவர்களின் அன்பு மாமனார் அவர்கள் லண்டனில் 14-11-2014 அன்று காலமானார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-11-2014 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.
திரு சின்னத்துரை சுப்பிரமணியம்(A.I.மணியம்) |
(இளைப்பாறிய விவசாய போதனாசிரியர், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், கூட்டுறவுச் சங்கத் தலைவர்- வட்டுக்கோட்டை, முன்னாள் வடமாகாண உலக உணவு வங்கி ஒருங்கிணைப்பாளர்- FORUT) |
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். அராலி தெற்கு வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சுப்பிரமணியம் அவர்கள் 14-11-2014 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, நாகம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சின்னத்துரை, விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, முத்துமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற மனோன்மணியம்மா அவர்களின் அன்புக் கணவரும், நடராஜா(பிரித்தானியா), ஆறுமுகதாசன்(பிரித்தானியா), சண்முகதாசன்(சுவிஸ்), அமிர்தினி(நியூசிலாந்து), மனோறஞ்சன்(இந்தியா), ரவீந்திரன்(கனடா), சுமதி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், தயாறதி, சுமித்திரா, மங்கையர்க்கரசி, சிங்கவரோதயன், புஸ்பமலர், தயாநிதி, சிவநேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும், சாய்அபிராமி, பிரணவன், வைஷ்ணாபிரியா, விஜித்வரோதயன், செந்தூரன், கோகிலதர்ஷன், சோபினி, ஆரணி, மாதுரன், நிருஷா, அபிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |