அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள இந்து மயானத்திற்கு தகன மேடை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வேலணை பிரதேசசபையினால் முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரூபாக்கள் ஒதுக்கப்பட்டு இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.முதற்கட்டமாக சடலங்களை எரியூட்டுவதற்கான தகனமேடை அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும்-இரண்டாம் கட்டமாக மேற்கூரையுடன் கூடிய மண்டபம் அமைக்கப்படும் என்று வேலணை பிரதேசசபையின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள வெட்டவெளி நிலப்பகுதியில் வைத்தே உடல்கள் தகனம் செய்யப்பட்டு வருவதுடன்- மழைக்காலங்களில் சடலங்களை தகனம் செய்வதில் இப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருவதாகவும்-ஏற்கனவே எமது இணையத்தில் கடந்த வருடம் சுட்டிக்காட்டிருந்தோம்.