அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், இந்தியாவை தற்காலிக வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த-விசுவலிங்கம் முத்துக்குமார் அவர்கள் 21-10-2014 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னாரின் 31ம் நாள் நினைவு தின நிகழ்வுகள் 20-11-2014 வியாழக்கிழமை அன்று லண்டனில் நடைபெற்றது.
லண்டனிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட- சில நிழற்படங்களை கீழே இணைத்துள்ளதுடன்,அன்னாரின் நன்றி நவிலலும் இணைக்கப்பட்டுள்ளது.
நன்றி நவிலல்
கடந்த 21-10-2014 அன்று இறைபதமடைந்த,எங்கள் அன்புத் தெய்வம்- அமரர் விசுவலிங்கம் முத்துக்குமார் அவர்களின் பிரிவுச் செய்தியறிந்து-இல்லம் நாடி வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும்-இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்ட அனைவருக்கும்-உலகத்தின் பலபாகங்களிலிருந்தும் தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும்-அனைத்து வழிகளிலும்,உதவியும்,ஒத்தாசையும் புரிந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும்-மரண அறிவித்தல் முதல் 31ம் நாள் நினைவஞ்சலி வரை வெளியிட்டு உதவி எமது கிராமத்து அல்லையூர் இணையத்திற்கும்-எமது இதயம் கலந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்தினர்-லண்டன்