தீவகத்தில் முதலாவது மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் புங்குடுதீவில் அமைப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகத்தில் முதலாவது மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் புங்குடுதீவில் அமைப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

 

pung-haritas-003-640x360 (1)

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர், புங்குடுதீவு சமூக பொருளாதார அபிவிருத்தி கூட்டுறவு சங்கம், ஹுதேக் ஹரிதாஸ் (Hudec caritas) நிறுவனத்திடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, “மழைநீர் சேமிப்புத் தொட்டிகள்” ஒன்பதை தமது செலவில் அமைத்து தர முன்வந்தது.

பின்னர் ஹுதேக் ஹரிதாஸ் -Hudec caritas – நிறுவனம், கிராம சேவையாளர், பிரதேச சேவையாளர் பிரிவுகளுடன் இணைந்து “மழைநீர் சேமிப்புத் தொட்டிகள்” ஒன்பதையும் அமைக்கும் இடங்களை தெரிவு செய்து, தற்போது அதன் வேலைப்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

புங்குடுதீவு பகுதியில் ஹுதேக் ஹரிதாஸ் (Hudec caritas) நிறுவனத்தால் நிர்மாணிக்கும் “மழை நீர் சேகரிப்பு தொட்டிகள்” மடத்துவெளி சனசமூக நிலையம், மடத்துவெளி கிராம சேவையாளர் அலுவலகம், தல்லையபற்று முருகன் கோவில், பாரதி சனசமூக நிலையம், சவேரியார் கடல் தொழிலாளர் சங்கம், ரோமன் கத்தோலிக்க பாடசாலை, அமெரிக்கன் மிசன் பாடசாலை, சிவலைப்பிட்டி துரைசாமி பாடசாலை, இறுப்பிட்டி முன்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.

தீவகத்தில்  முதல் தடவையாக மழைநீர் சேமிப்புத் தொட்டிகள்  புங்குடுதீவிலேயே அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

நன்றி-புங்குடுதீவு இணையம்

 

pung-haritas-005 pung-haritas-001-640x360

pung-haritas-002-640x360
pung-haritas-006-640x360 pung-haritas-007-640x360 pung-haritas-008-640x360 (1)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux