முருக விரதங்களில் ஒன்றான கந்தசஸ்டியின் இறுதி நாளான புதன்கிழமை அன்று யாழ் நல்லூர் முருகன் ஆலயத்தில் சூர சம்காரம் வெகுசிறப்பாக நடைபெற்றது. ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் முருகனுக்காக அனுஸ்டிக்கப்படும் கந்தஷ்டி விரதம் சைவ பக்தர்களால் ஆறு நாட்கள் தொடர்ந்து அனுஷ்டிக்கப்பட்டு,இறுதி நாளான ஆறாவது நாளன்று அனைத்து முருக ஆலயங்களிலும் சூர சம்காரம் சிறப்பாக இடம்பெறும். அந்தவகையில் முருகனை மூல மூர்த்தியாக கொண்ட நல்லூர் ஆலயத்தில் இடம்பெற்ற சூர சம்காரத்தினைப் பார்வையிட்டு அருள்பெற,பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.