அல்லைப்பிட்டி மெதடிஸ்த திருச்சபையின் அருட்சகோதரன். மா.நவரட்ணராஜா அவர்களின் அன்புச் சகோதரர் மாணிக்கம் ஸ்ரீகாந்தராசா அவர்கள் 24-10-2014 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-10-2014 சனிக்கிழமை அன்று கிளிநொச்சியில் நடைபெற்றன.அன்னாரின் இறுதியாத்திரையின் சில நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.
அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல இறைவனை மன்றாடி நிற்கின்றோம்.
அல்லைப்பிட்டி மெதடிஸ்த திருச்சபையின் அருட்சகோதரன் மா.நவரட்ணராஜா அவர்கள் தொடர்ந்து அல்லையூர் இணையத்தின் வளர்ச்சிக்கு, உதவி வருபவர் என்பதனை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.