அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா 2014 -வித்தியாலய கலை அரங்கில் பாடசாலையின் அதிபா் கோ.பத்மநாதன் அவா்களின் தலைமையில் 15.10.2014 புதன் கிழமை காலை 10 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளா் திரு ஜோன் குயின்ரஸ் அவா்களும் சிறப்பு விருந்தினராக வேலணை பிரதேச சபை தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் வேலணை பிரதேச அமைப்பாளருமாகிய சின்னையா சிவராசா ( போல்) அவா்களும் மற்றும் அல்லைப்பிட்டி இனிச்ச புளியடி முருகன் கோவில் தர்மகர்த்தா திரு செ. நடேசப்பிள்ளை அவா்களும் பெரியவர் அல்பிரட் ஜோர்ஜ் அவர்களும் இவர்களுடன் சமூக ஆா்வலரும் பாடசாலையின் பழையமாணவருமாகிய திரு கேதாரநாதன் அவா்களும் பிரபல வா்தகா் திரு மகிதரன் அவா்களும் அதிகமான பழைய மாணவர்களும் பெற்றோா்களும் கலந்து சிறப்பித்தாா்கள்.
இந்நிகழ்வில் பல வருடங்களுக்குப் பின் பாடசாலையில் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி விஜயசேகரம் வினோதினிக்கும் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குகொண்ட மாணவி செல்வி அன்ரன் எட்வேட் ஜெறோமி ஆகிய இரு மாணவிகளையும் அவா்களின் பெற்றோா்களையும் கௌரவித்த நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
2014ஆம் ஆண்டுக்கான சிறந்தமாணவர்கள்
பண்டிதர் க. வ. ஆறுமுகம் விருது மற்றும் சைக்கிள் பெறுபவர் -என்றிக் கமில்ரன்.
செல்வி.மு.தில்லையம்பலம் விருது மற்றும் சைக்கிள் பெறுபவர் -மரியா ரூபனாயகம் மரியறேநிஸ்ரா
அமரர் உருத்திரகுமார் நினைவுப் போட்டி பரிசு வழங்கல் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி வி. வினோதிநியைப் பாராட்டி பரிசில் வழங்கல்.-திரு த.சந்திரகுமார் (பிரான்ஸ்) சார்பாக திரு செ.நடேசபிள்ளை முன்னிலையில் வழங்கப் பட்டது.
மாலாசந்திரன் கல்வி ஊக்குவிப்புத் திட்டம் (MEP) சார்பாக மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப் பட்டன.
விழா ஏற்பாடு MEP