தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகருக்கு மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் ஏழுதள இராஜகோபுரத்தின் கட்டுமானப்பணிகள் தற்போது அழகான கலைவேலைப்பாடுகளுடன் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்த வருடத்தின் முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இராஜகோபுரத்தின் நிலக்கீழ் தள கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து- தொடர்ந்து கருங்கல்லில் அமைக்கப்படும் முதல்தளத்தின் வேலைகள் தற்போது துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.அத்தோடு பிள்ளையாருக்கான மணிக்கூட்டுக் கோபுரம் ஒன்று புதிய வடிவில் அழகாக அமைக்கப்பட்டு வருவதுடன் -மேலும் வைரவர் ஆலயம் ஒன்றும் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
அல்லையூர் இணையத்திற்காக- திரு அகிலன் நற்குணம் அவர்களினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.