அல்லைப்பிட்டியில் சிறப்பாக நடைபெற்று வரும் மாலைநேர ஆங்கில வகுப்புக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் சிறப்பாக நடைபெற்று வரும் மாலைநேர ஆங்கில வகுப்புக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

T3

யாழ்.சேகர முகாமைக் குரு. அருட்திரு. ரவிசங்கர் அவர்கள் மூலமாக ஒழுங்கு செய்யப்பட்ட ஆங்கில பிரத்தியேக மாலைநேர வகுப்புகள். சிங்கப்பூர் மெதடிஸ்த திருச்சபை தமிழ்ப்பகுதியினரின் அனுசரணையுடன்  01-10-2014 தொடக்கம் அல்லைப்பிட்டியில்  மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 
அல்லைப்பிட்டி மெதடிஸ்த திருச்சபையின்  அருட்சகோதரன். மா.நவரட்ணராஜா அவர்களின் தலைமையில் மெதடிஸ்த திருச்சபையின் கட்டிடத்தில் மாலை நேர ஆங்கில வகுப்புக்கள் நடைபெறுகின்றது. இதில் சேர்ந்து ஆங்கில கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கான அனுமதிப் படிவம் சில நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
அல்லைப்பிட்டியில் வசிக்கும் மாணவர்களும், பெற்றோரும். பூரண ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில்  அடுத்த  வருடத்தில் ஆங்கிலக் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது   மாலைநேர ஆங்கில வகுப்புக்களில் 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்வதாகவும்-அடுத்து வரும் கிழமைகளில் மாணவர்களின் வரவு மேலும் அதிகரிக்கலாம் என்று அருட்சகோதரன். மா.நவரட்ணராஜா அவர்கள் எமது இணையத்திற்கு தெரிவித்தார்.
உலகப் பொதுமொழியாக கருதப்படும் ஆங்கில மொழியினை-எமது கிராமத்து மாணவர்களும் கற்றுத் தேறவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் ஆகும்.

T3 T3 T3 T3 T3 T3

Leave a Reply