அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள மெதடிஸ்த திருச்சபையினால் நடத்தப்பட்டு வரும் பாலர் பாடசாலையில்- நவராத்திரியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அன்று விஷேட வழிபாடு நடத்தப்பட்டதாக தெரிய வருகின்றது.
அல்லைப்பிட்டியில் இந்துமக்கள் அதிகளவு செறிந்து வாழும் பகுதியில் அமைந்துள்ள ஒரேயொரு மழலைகள் பாலர்பாடசாலையாக மெதடிஸ்த பாலர் பாடசாலை அமைந்துள்ளதுடன் -இங்கு சமய வேறுபாடின்றி அதிகளவான இந்துசமய பாலர்கள் கல்விபயின்று வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.