அல்லையூர் இணையத்தின் நிதியுதவியுடன்-அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள வாகீசர் சனசமூக நிலையத்தில் வியாழக்கிழமை மாலை நவராத்திரி பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வாகீசர் சனசமூக நிலையத்தில் கல்விபயிலும் மாலைநேர வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வாகீசர் சனசமூக நிலைய நிர்வாக உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் புதன்கிழமை அன்று வாணிவிழாவினை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.