இலங்கையில் அண்மையில் வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய மற்றும் அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலய மாணவ மாணவிகளில் ஒரு மாணவியே சித்தியடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பராசக்தி வித்தியாலய மாணவியான செல்வி விஜயசேகரம் வினோதினி அவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் 175 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார்.
இவரை புலம்பெயர் அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் -மண்மறவாத மனிதரும் தொடர்ந்து ஊருக்கு உதவி வருபவருமாகிய-திரு தவவிநாயகம் சந்திரகுமார் அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்ததோடு 5 ஆயிரம் ரூபாக்களை மாணவியின் கல்விக்காக வழங்கியுள்ளார். என்பதனையும் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்.