பரிஸில் வருடந்தோறும் கலைத்தென்றல் என்னும் இசைநிகழ்வினை நடத்திவரும் ஆர்.ரி.எம் பிறதர்ஸினால் இம்முறை 28-09-2014 ஞாயிறு அன்று நடத்தப்பட்ட 22வது கலைத்தென்றல் இசைவிழாவின் போது -யாழ் மாவட்ட விழிப்புலன் இழந்தோர் சங்கத்திடம் வழங்குவதற்காக-அல்லையூர் இணையத்தின் இயக்குநர் திரு செல்லையா சிவா அவர்களிடம் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களின் கரவோசத்துடன் மேடையில் வைத்து ஆர்.ரி.எம் பிறதர்ஸ்,களில் ஒருவரான திரு இரா.குணபாலன் அவர்கள் வழங்கினார்.
அல்லையூர் இணையம் ஆற்றிவரும் அறப்பணிச் சேவையினை எமது இணையத்தின் ஊடாக அறிந்து கொண்ட ஆர்.ரி.எம் பிறதர்ஸ் எம்மீது நம்பிக்கை வைத்து 2 இலட்சம் ரூபாக்களை எம்மிடம் வழங்கியது எமது அறப்பணிச் சேவைக்கு மேலும் உத்வேகத்தை அளித்துள்ளது.
மேலும் இந்நிகழ்வில் நடனம்-பாடகர் தெரிவு-கலைஞர்,எழுத்தாளர்,வர்த்தகர் அடங்கிய மூவருக்கு மதிப்பளிப்பு செய்யப்பட்டதுடன் 11வது இசைக்குயில் தெரிவும் இடம்பெற்றது. இவ்விழாவின் சிறப்புமலரை -அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,வர்த்தகரும் மண்மறவாத மனிதருமாகிய திரு தவவிநாயகம் சந்திரகுமார் அவர்கள் வெளியிட்டு வைத்தார்.