பாரீஸ் ஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு எச்சரிக்கை – மக்கள் வெளியேற்றப்பட்டனர்

பிரான்ஸ் தலைநகர் பரிசில் அமைந்துள்ள ஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இக்கோபுரத்தில் குண்டுவைக்கப்பட்டிருப்பதாக, இக்கோபுரத்தை நிர்வகிக்கும் நிறுவனத்திற்கு இனந்தெரியாத நபர் ஒருவர் பிரான்ஸ் நேரப்படி இன்று (செவ்வாய்) இரவு 9 மணியளவில் தொலைபேசி மூலம் எச்சரிக்கைவிடுத்தார்.

அதையடுத்து அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளும் ஏனையோரும் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர். அவ்வேளையில் சுமார் 25,000 பேர் ஈபிள்கோபுரப் பகுதியில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.கோபுரத்தைச் சுற்றியுள்ள பூங்காவிலிருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

324 மீற்றர் (1063 அடி) உயரமான ஈபிள் கோபுரம் 1889 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது.

இதற்குமுன் 2005 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதியும் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக ஈபிள் கோபுரத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

22.07.2003 இல் தீவிபத்து ஒன்றின் காரணமாக அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux