யாழ் தீவகத்தில் தொடர்ந்து ஏற்பட்டுள்ள கடும் வறட்சியினால்-குடிநீர் உணவின்றி கால்நடைகள் செத்து மடிகின்ற அபாயமான நிலை மீண்டும் தோன்றியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மழையின்றி புழுதிபறக்கும் வீதிகளில் அலைந்து திரியும் கால்நடைகள்-நீர் உணவு இன்றி ஆங்காங்கே செத்து மடிவதாக மேலும் தெரிய வருகின்றது.
வேலணையில் செத்துக்கிடந்த மாடுகளை -வேலணை பிரதேசசபை ஊழியர்களினால் அப்புறப்படுத்தப்பட்டு புதைக்கப்படுவதாக தெரிய வருகின்றது.தொடர்ந்து இந்நிலமை நீடித்தால் தீவகம் பெருமளவில் பாதிக்கப்படலாம் என்று சமூக ஆர்வலர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
கால் நடைகள் கடும் வெப்பத்தினால் இறக்கின்றனவா?அல்லது ஏதாவது நோய் தாக்கத்தினால் மடிகின்றனவா? என்று இதுவரை கண்டறியப்படவில்லை என்று மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
தீவகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு நாள் மழை பெய்த போதிலிலும்-பின்னர் வெய்யில் சுட்டெரிப்பதாகவும் பொதுமகன் ஒருவர் எமது இணையத்திற்கு தெரிவித்தார்.