வேலணை பிரதேசசபையில் தற்காலிகமாக பணியாற்றிய 24 பணியாளர்களை -நிரந்தரமாக நியமிக்கும் நிகழ்வு 15-09-2014 திங்கட்கிழமை அன்று வேலணை பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலஸ்ரின் (உதயன்) அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பணியாளர்களுக்கான நிரந்தர நியமனக் கடிதத்தினை வழங்கினார்.மேலும் இவ்விழாவில் வேலணை பிரதேசசபையின் தவிசாளர் திரு சின்னையா சிவராசா (போல்)அவர்களுடன் பிரதேசசபையின் உறுப்பினர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேலணை பிரதேசசபையில் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,மூன்று பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.