அல்லைப்பிட்டி அருள்மிகு கறண்டப்பாய் கந்தசுவாமி கோவில் வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழா 07-09-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆரம்பமாகி தொடர்ந்து தினமும் முருகப்பெருமானுக்கு பகல் விஷேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று- அதனைத் தொடர்ந்து முருகப் பெருமான் வள்ளி தெய்வயானையுடன் வீதியுலா வரும் திருக்காட்சியும் இடம் பெற்று வருவதுடன் பின்னர் அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்லைப்பிட்டி கறண்டப்பாய் கந்தசுவாமி கோவில் அலங்கார உற்சவத்தின் எட்டாம் நாள்( 14-09-2014 ஞாயிற்றுக்கிழமை )திருவிழாவின் உபயகாரர் திரு கிஸ்ணபிள்ளை இராஜலிங்கம் (சுவிஸ்)அவர்களின் வேண்டுகோளின் பேரில் அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை- உங்களின் பார்வைக்காக கீழே இணைத்துள்ளோம்.