அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பொன்னுத்துரை அன்ரன் ஞானேந்திரன் அவர்கள் 10-08-2014 அன்று பரிசில் காலமானார். அன்னாரின் 31ம் நாள் நினைவுதின நிகழ்வுகள் 13-09-2014 சனிக்கிழமை அன்று Eglise saint vincent paul-villepinte என்னும் முகவரியில் அமைந்துள்ள புனித தேவாலயத்தில் திருப்பலி ஓப்புக் கொடுக்கப்பட்டதுடன் பின்னர் அருகில் அமைந்துள்ள உணவு விடுதியில் அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் அதனைத் தொடர்ந்து மதியபோசனமும் இடம் பெற்றது.
அல்லைப்பிட்டி மக்களால் நன்கு அறியப்பட்ட அமரர் பொன்னுத்துரை அன்ரன் ஞானேந்திரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய-அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையிடம் வேண்டி நிற்கின்றோம்.