அல்லையூர் இணையம் கடந்த ஒரு மாதகாலமாக இந்தியாவிலிருந்து தமது செய்திப்பதிவுகளை பல சிரமங்களுக்கு மத்தியில் வெளி கொண்டு வந்திருந்த நிலையில் -இந்தக் காலப்பகுதியில் எமக்குத் தெரிந்த எம்மோடு பழகிய சிலர் உட்பட நம்ம ஊரைச் சேர்ந்த ஆறுபேர் அடுத்தடுத்து மரணமானார்கள்.இவர்களது உறவினர்களின் வேண்டுகோளின் பேரில் மறுக்க முடியாத நிலையில் எமது சிரமங்களை பொருட்படுத்தாது இவர்களது மரண அறிவித்தல்-இறுதியாத்திரையின் நிழற்படப்பதிவு மற்றும் வீடியோப்பதிவு என்பனவற்றை முடிந்த வரை பதிவு செய்து இவர்களின் உறவினர்கள் நண்பர்களின் பார்வைக்கு அல்லையூர் இணையத்தில் வெளியிட்டிருந்தோம்.
அல்லைப்பிட்டி முதல் கனடா வரை மரணமான நம்மவர்களின் மரண அறிவித்தல்களை பார்வையிட்ட பலபேர் தொலைபேசிமூலம் தமது இரங்கலைத் தெரிவித்ததாக எமக்கு கூறியிருந்தார்கள்-நாம் பணத்திற்காக இதைச் செய்யவில்லை என்பதனையும் ஆத்ம திருப்திக்காகவே இச்சேவையினை தொடர்ந்து ஆற்றி வருகின்றோம்.என்பதனையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
அடுத்தடுத்து நம்மவர்கள் மரணமடைந்தது மனது எதையோ எண்ணத் தோன்றுகின்றது.
மரணம் தானே நிரந்தரம்-மனிதன் மரணத்தை நெருங்கும் வரை மனிதனாக வாழலாமே!