இலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தனின் வருடாந்த தேர்த்திருவிழாவினை முன்னிட்டு-நேர்த்திக்கடன் தீர்க்கும் பொருட்டு மண்கும்பானைச் சேர்ந்த,இளைஞர் ஒருவர் அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் முன்றலில் இருந்து பறவைக்காவடி மூலம் நல்லூர் முருகனைச் சென்றடைந்தார்.
ஆசாரசீலர்களாக பயபக்தியுடன் இவரது உறவினர்கள் நண்பர்கள் பின் தொடர பறவைக்காவடி நல்லூர் முருகனை பல மணி நேரத்தின் பின் சென்றடைந்ததாக இவருடன் கூடவே சென்ற நண்பர் ஒருவர் எமது இணையத்திற்குத் தெரிவித்தார்.