வேலணை பிரதேசசபைக்கு உட்பட்ட சிறுத்தீவுப் பகுதியில் உல்லாச ஹோட்டல் ஒன்று அமைப்பதற்காக-பல மாதங்களுக்கு முன்னர் ஆளுஞர் சந்திரசிறி மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரினால் அடிக்கல் நாட்டப்பட்டிருந்ததும் அச்செய்தி எமது இணையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்ததும் நீங்கள் ஏற்கனவே அறிந்த செய்தியாகும் .
அடிக்கல் நாட்டப்பட்டு பல மாதங்களுக்குப் பின்னர் தற்போது ஹோட்டல் அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.
உல்லாச ஹோட்டல் அமையவுள்ள சிறுத்தீவு பகுதியானது -யாழ் கோட்டைக்கு தெற்குப்பக்கமாகவும்- தீவக பிரதான பண்ணை வீதிக்கு கிழக்குப் பக்கமாகவும் அமைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.