மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் 30-08-2014 சனிக்கிழமை அன்று காலை 10.மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து தினமும் சிறப்பாக திருவிழாக்கள் நடைபெற்று-07-09-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று திருவெண்காடு சித்திவிநாயகப்பெருமான் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக் காட்சியும் இடம் பெற்றது.
திருவெண்காடு சித்திவிநாயகர் தேரேறி வீதியுலா வரும் காட்சியினைக் கண்டுகழிக்க வெளிநாடுகளிலிருந்தும் வெளியிடங்களிலிருந்தும் பெருமளவான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகரின் வருடாந்த தேர்த்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினையும்-மகோற்சவ உபயகாரர்களினால் பதிவு செய்யப்பட்ட முழுமையான வீடியோப்பதிவினையும் உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
வீடியோ
பகுதி01-
பகுதி02 என இணைக்கப்பட்டுள்ளது.