மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் 30-08-2014 சனிக்கிழமை அன்று காலை 10.மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
அடியவர்களின் அரோகரா ஓங்கி ஒலிக்க மேள, தாளங்கள் முழங்க சித்தி விநாயகனின் கொடி ஏறியது.
கொடியேற்றத் திருவிழாவினைத் தொடர்ந்து தினமும் மாலை வேளைகளில் விசேட சமய சொற்பொழிவுகளும், நாதஸ்வரக் கச்சேரிகளும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகனின் மகோற்சவத்தில் அடியவர்கள் தினமும் கலந்து கொண்டு எம் பெருமானின் திருவருளினைப் பெற்றுய்யும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
மண்டைதீவு சித்திவிநாயகனின் கொடியேற்றத் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவினை கீழே இணைத்துள்ளோம்.